News March 26, 2025
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி

கடலூர் விருத்தாசலம் ஏ.ஆர்.எஸ்.மஹால் அருகே உள்ள ஏ.கே.டி. நீட் பயிற்சி மையங்களில், 100% கட்டண சலுகையில் சேர்க்கை பெறுவதற்கான திறனறி தேர்வு இன்று (மார்ச்.26) காலை 10 மணிக்கு நடக்கிறது. இதில் நீட் மறுதேர்வு எழுத உள்ள அரசு பள்ளி மாணவர்கள், தற்போது பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவர்களும் இந்த தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இத்தேர்வு எழுத 6369146590, 9361165429 ஆகிய எண்களில் முன்பதிவு செய்ய வேண்டும்.
Similar News
News January 8, 2026
கடலூர்: நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு

சிதம்பரம் மாரியப்பா நகரை சேர்ந்தவர் கலா (50). அண்ணாமலை பல்கலைக்கழக நூலகத்தில் பணிபுரிந்து வரும் இவர், நேற்று மாலை வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மாரியப்பா நகர் அருகே சென்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த மர்ம நபர்கள் கலா கழுத்தில் இருந்த 11 சவரன் செயினை பறித்து சென்றனர். இதுகுறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News January 8, 2026
பொங்கல் பரிசு: கடலூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட தமிழக அரசு பொங்கல் பரிசுத்தொகுப்பினை அறிவித்துள்ளது. இதற்காக கடலூர் மாவட்டம் முழுவதும் அனைத்து குடும்ப அட்டைத்தாரர்க்கும் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்க மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன் அடிப்படையில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை நேரில் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
News January 8, 2026
கடலூர்: ரோந்து செல்லும் காவலர்கள் முழு விவரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (ஜன.7) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.8) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


