News August 25, 2024
அரசு பள்ளியில் படித்த 3 பேருக்கு மருத்துவ படிப்பில் இடம்

திருப்பத்தூர் அருகே பெரிய கண்ணாலப்பட்டி பள்ளியில் 2021-2022ஆம் கல்வி ஆண்டில் படித்த தனுஷ், பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த தீபன் ராஜ், 2022-2023 கல்வி ஆண்டில் படித்த ஸ்ரீதர்ஷினி ஆகியோர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 3 பேருக்கும் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைத்ததுள்ளது. இவர்களுக்கு அப்பள்ளியின் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் பாராட்டி வருகின்றனர்.
Similar News
News December 3, 2025
இன்று திருப்பத்தூர் இரவு ரோந்து பணிகள்

இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முக்கிய சாலைகள், சந்திப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் காவல் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய ரோந்து குழுக்கள் முழுநேரமும் பணியில் ஈடுபட்டு, அவசர நேரங்களில் உடனடி உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
News December 3, 2025
மாற்றுத்திறனாளிகளை பாராட்டிய ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி!

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (டிச-03) ஆசிரியர் நகரை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஆனந்தராஜ் என்பவர் பாரா ஒலிம்பிக் தடகள போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம் வென்றுள்ளார். குமரேசன் எனும் மாற்றுத்திறனாளி ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றார். இருவரும், ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.
News December 3, 2025
திருப்பத்தூரில் பெரியார் விருது விண்ணப்பங்கள் வரவேற்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். 2025 ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கான விண்ணப்பங்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டிய மாவட்ட கடைசி டிச.18 நாள் ஆகும். என ஆட்சியர் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளார்.


