News March 26, 2025
அரசு பள்ளிகளில் சிற்றுண்டி திட்டம் விரிவுபடுத்தப்படும் – அமைச்சர்

சட்டப்பேரவையில் இன்று பேசிய அமைச்சர் நமச்சிவாயம், புதுவையில் நீட் பயிற்சி பெற 585 மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், புதுவை நகரப்பகுதியில் – 2, கிராமப்புறங்களில் – 2 , காரைக்காலில் – 1 என நீட் பயிற்சி மையம் தொடங்கப்படும். அரசு பள்ளிகளை ஒருங்கிணைத்து மாணவர்கள் கல்வி திறன், ஆசிரியர்கள் திறன் அதிகரிக்கப்படும். அரசு பள்ளிகளில் மாலை நேர சிற்றுண்டி திட்டம் விரிவுபடுத்தப்படும், என்றார்.
Similar News
News September 15, 2025
புதுச்சேரி: டிகிரி போதும் ரயில்வேயில் வேலை!

புதுச்சேரி மக்களே, ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), Station Controller 368 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி போதுமானது. சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 14.10.2025 தேதிக்குள் <
News September 15, 2025
மத்திய அமைச்சரை வரவேற்ற புதுவை அமைச்சர்

புதுச்சேரியில் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தனியார் விடுதியில் நடைபெற்று வருகிறது. இதில் மத்திய அமைச்சர்கள் மன்சுக் மாண்டியா, அர்ஜுன் ராம் மேக்வால், அமைப்பு செயலாளர் சப்தோஷ் ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக கூட்டத்தில் பங்கேற்க வந்த மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலை, அமைச்சர் நமச்சிவாயம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
News September 15, 2025
புதுச்சேரி: காருக்குள் ஆண் சடலம்-போலீசார் விசாரணை

புதுச்சேரி அண்ணா நகர் முதல் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக அப்பகுதிக்கு வந்த உருளையன்பேட்டை போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்து காருக்குள் சடலத்தை வைத்தனரா? அல்லது மது போதையில் காருக்குள் சென்று இறந்து கிடந்தாரா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.