News August 10, 2024
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் ரூ. 2.52 கோடி மதிப்பில் வீட்டுமனை பட்டா மற்றும் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் மூலமாக தீர்வு காணப்பட்டு அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு தர்மபுரி பொறுப்பு அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நேற்று(ஆக 9) வழங்கினார். இந்நிகழ்வில் கலெக்டர் சாந்தி, எம்பி மணி, மு. அமைச்சர் பழனியப்பன், முன்னாள் எம்எல்ஏ தடங்கம் சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Similar News
News November 17, 2025
தருமபுரி: வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை!

ஈசல்பட்டியை சேர்ந்த சசிகுமார் இவரது மனைவி முத்துலட்சுமி இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது.முத்துலட்சுமியிடம் பணம் நகை வாங்க கணவரது விட்டார் கூறிய நிலையில் தொடர்ந்து தகராறு ஏற்பட்டுள்ளது.மேலும் சசிகுமார் குடிப்பதும் அடிப்பதுமாக இருந்துள்ளார், இந்த நிலையில் முத்துலட்சுமி நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தொப்பூர் காவலர்கள் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News November 17, 2025
தருமபுரி: B.E/B.Tech படித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளம்!

தருமபுரி: இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News November 17, 2025
தருமபுரி: ரயில் விபத்தில் பலி!

பொம்மிடி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயில் மோதி உயிரிழந்து கிடந்தார். சேலம் ரயில்வே காவல்துறை சம்பவ இடத்திற்குச் சென்று உடலை மீட்டு விசாரித்தனர். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


