News June 25, 2024
அரசு தேர்வு எழுதுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் ஜூலை 13 அன்று நடைபெற உள்ள TNPSC GROUP 1 தேர்விற்கான முழுப்பாட மாதிரி தேர்வுகள் ஜூன் 24, 27 ஜூலை 2, 5 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் 1 மணி வரை மாவட்ட வேலை வாய்ப்பு (ம) தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 04172291400 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
Similar News
News December 1, 2025
ராணிப்பேட்டை: கம்மல் அறுத்து கொள்ளை.. மூதாட்டி பலி!

அக்ராவரம் மலைமேடு கிராமத்தைச் சேர்ந்த சாலம்மாள்(70). இவர் வீட்டில் தனியாக வசித்து வரும்போது கடந்த 26ஆம் தேதி இவரது காதுகளில் இருந்த கம்மல்களை கத்தியால் அறுத்து திருடன் கொள்ளையடித்து சென்றான். அதைத் தொடர்ந்து சாலம்மாள் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று டிச.1ம் தேதி அதிகாலை சாலம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவத்தை சிப்காட் போலீசார் விசாரிக்கிறனர்.
News December 1, 2025
ராணிப்பேட்டை: 2,147 செவிலியர் பணியிடங்கள்.. நேர்காணல் இல்லை!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிறைவடைந்த பெண்கள் இதற்கு விண்பிக்கலாம். இந்த பணிக்கு நேர்காணல் கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும். மேலும், மாதம் ரூ.19,500 – ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News December 1, 2025
ராணிப்பேட்டை: கார், லாரி நேருக்கு நேர் மோதல்.. விபத்து!

சோளிங்கரிலிருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் பாராஞ்சியில் நேற்று நவ.30ஆம் தேதி காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த நபர் காயத்துடன் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸில் சோளிங்கர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்தில் சாலையோரம் இருந்த ஒரு வீடு மற்றும் மின் கம்பம் முறிந்து விழுந்தது. விபத்து குறித்து சோளிங்கர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


