News May 16, 2024

அரசு ஐடிஐ-யில் சேர விண்ணப்பிக்கலாம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு (ம) பயிற்சித் துறையின் கீழ், பெரம்பலூர், ஆலத்தூர், குன்னம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் (ம) 3-தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் தற்போது 2024-25ம் கல்வியாண்டிற்கான பயிற்சியாளர் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கு <>-1<<>> என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கற்பகம் தகவல் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 15, 2025

பெரம்பலூர்: மாணவனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஆட்சியர்

image

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஒரு கல்லூரி மாணவர் தனது படிப்புக்காக மடிக்கணினி (Laptop) வழங்கக் கோரி மனு அளித்திருந்தார். அந்த மாணவரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் மிருணாளினி, அந்த மாணவருக்கு திடீர் பரிசாக ஒரு புதிய மடிக்கணினியை வாங்கி வழங்கினார். எதிர்பாராத இந்த உதவியால், அந்த மாணவரின் தந்தை கண்ணீர் மல்க ஆட்சியருக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.

News October 15, 2025

பெரம்பலூர்: பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள்!

image

பெரம்பலூர், தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் இரவு 6 மணி முதல் 7 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்க பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் பாதுகாப்பாகவும், குறைந்த ஒளியுடனும் மற்றும் குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையுடைய பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அறிவுறுத்தியுள்ளார்.

News October 15, 2025

பெரம்பலூர்: கல்வி உதவித்தொகை வேண்டுமா?

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின் தங்கியோர், சீர்மரபினர் மாணவர்களுக்கு பிரதமர் யாசஷ்வி திட்டத்தின் கீழ் https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm என்ற இணையதளம் மூலம் பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் https://scholarships.gov.in என்ற இணைய தளம் மூலம் 15.10.2025-ம் தேதிக்குள்ளாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!