News October 23, 2024
அரசு ஐடிஐயில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் மற்றும் கோட்டூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், பயிற்சியாளர்கள் சேர்க்கை 2024 கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நேரடி சேர்க்கை நடைபெற உள்ளதால் மாணவ, மாணவியர் தங்களது சான்றிதழ்களுடன் 18.10.2024 முதல் 30.10.2024 ஆம் தேதி வரை விண்ணப்பித்து சேர்ந்து கொள்ளலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
Similar News
News October 26, 2025
திருவாரூர் மாவட்டத்தின் மழையின் அளவு

திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. குறிப்பாக திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்த நிலையில் மாவட்டம் முழுவதும் காலை 6 மணி நிலவரப்படி 14 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
News October 26, 2025
திருவாரூர்: ரூ.2.10 லட்சம் மானியம் வேண்டுமா?

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க. (<<18108091>>பாகம்-2<<>>)
News October 26, 2025
திருவாரூர்: ரூ.2.10 லட்சம் மானியம் பெற (2/2)

▶️கொட்டகை அமைக்க சொந்த இடம் இருக்க வேண்டும்.
▶️ ஏற்கெனவே மாடு வளர்த்து வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
▶️ ஆவின் நிறுவனத்திற்கு அதிகளவில் பால் விநியோகம் செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
▶️ ஆடு கொட்டகை, கோழிக்கூண்டு மானியத் திட்டங்களில் பயன்பெற்றிருக்க கூடாது.
▶️ விண்ணதாரர் 100 நாள் வேலை திட்டத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.


