News June 25, 2024
அரசு அலுவலகங்களில் நாளை போதை எதிர்ப்பு உறுதிமொழி

புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை செயலர் ஜெய்சங்கர் இன்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், “நாளை சர்வதேச போதைப்பொருள் கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு துறை அலுவலகத்திலும் காலை 11 மணிக்கு போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான உறுதிமொழியை எடுக்க வேண்டும். இந்த உறுதிமொழி நிகழ்ச்சியை அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News July 9, 2025
புதுவை: 10th படித்தால் ரூ.50,000 வரை சம்பளம் 1/2

புதுவை மக்களே அரசு அலுவலகங்களில் உதவியாளர், காவலர் பணிக்காக ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. இப்பணிக்கு சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 24-ம் தேதி கடைசி ஆகும். உடனே https://ssc.gov.in/home/apply என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். (<<17003895>>பாகம்-2<<>>)
News July 9, 2025
10th படித்தால் காவலர், உதவியாளர் வேலை 2/2

▶️அரசு அலுவலக காவலர், உதவியாளர் பணிக்கு கணினி சார்ந்த தேர்வு திருச்சியில் நடைபெறும்.
▶️இதற்கு விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள தகுதிகளை சரிபார்த்துக் கொள்ளவும்.
▶️இதற்கு விண்ணப்பிக்க ரூ.100 கட்டணமாகும். SC/ST/pWbd/ESM மற்றும் பெண்களுக்கு கட்டணமில்லை
▶️உரிய ஆவணங்களுடன் https://ssc.gov.in/home/apply எனும் இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். SHARE IT
News July 9, 2025
புதுச்சேரி பேருந்து நிலையம் முன்பு போலீசார் குவிப்பு

மத்திய அரசு கொண்டுவந்துள்ள தொழிலாளர் விரோத சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி, புதுச்சேரியில் இன்று பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் INDIA கூட்டணி சார்பில் பந்த் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் முன்பு INDIA கூட்டணி மற்றும் தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் பாதுகாப்பு கருதி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.