News June 25, 2024
அரசு அலுவலகங்களில் நாளை போதை எதிர்ப்பு உறுதிமொழி

புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை செயலர் ஜெய்சங்கர் இன்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், “நாளை சர்வதேச போதைப்பொருள் கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு துறை அலுவலகத்திலும் காலை 11 மணிக்கு போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான உறுதிமொழியை எடுக்க வேண்டும். இந்த உறுதிமொழி நிகழ்ச்சியை அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News December 14, 2025
ஆந்திரா சென்று ரூ.6 லட்சத்தை மீட்ட புதுச்சேரி போலீசார்

புதுச்சேரி கொசப்பாளையம் பகுதியில் மூதாட்டியிடம் கடந்த மாதம் 24-ந்தேதி 22 பவுன் நகை, ரூ.1,10,000 ரொக்கம் பறித்த சென்ற வழக்கில், ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த வள்ளி, சாராத ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அப்போது பணத்தை அவர்கள் ஆந்திராவில் பதுக்கி வைத்துள்ளதாக கூறியதை தொடர்ந்து, குற்றவாளிகளை அழைத்து கொண்டு ஆந்திரா சென்ற புதுச்சேரி போலீசார் ரூ.6 லட்சம் பணத்தை அதிரடியாக மீட்டனர்.
News December 14, 2025
புதுச்சேரி பள்ளி மாணவி சாதனை

புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி காவிய ஸ்ரீ, இளம் திறமையாளர்களுக்கான ‘கீர்த்தி புரஸ்கார்’ விருது மற்றும் நடனத்திற்கான தமிழக அரசின் சிறப்பு விருது பெற்று சாதனை படைத்துள்ளார். இதையடுத்து நேற்று பள்ளியில் நடந்த விழாவில் மாணவிக்கு பள்ளியின் இயக்குநர் பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்து மற்றும் இனிப்புகள் வழங்கியும் பாராட்டினார்.
News December 14, 2025
புதுவை: மன உளைச்சலில் கொத்தனார் தற்கொலை

புதுவை முருங்கம்பாக்கம் கணபதி நகரை சேர்ந்தவர் தண்டபாணி (61). கட்டிட தொழிலாளியான இவருக்கு மனைவி, 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். இந்நிலையில் நோய் கொடுமையால் தண்டபாணி கடும் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர், எலி பேஸ்ட்டை உட்கொண்டு நேற்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


