News April 15, 2025

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை!

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. நீலகிரி மாவட்டம் உதகையில் 67 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் வரும் ஏப்.,21ஆம் தேதி வரை <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News December 10, 2025

நீலகிரியில் 88 புதிய கிராம ஊராட்சிகள் உருவாக்கம்!

image

நீலகிரி மாவட்டத்தில் 88 கிராம ஊராட்சிகளை புதிதாக உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இருந்த 35 கிராம ஊராட்சிகளில் 27 கிராம ஊராட்சிகள் பிரிக்கப்பட்டு 88 கிராம ஊராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 9 கிராம ஊராட்சிகள் பிரிக்கப்படாமல் உள்ளது. இதன்படி நீலகிரியில் மொத்தம் 95 கிராம ஊராட்சிகளாக மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

News December 10, 2025

காவலரை விரட்டிய காட்டு யானை; பந்தலூரில் பரபரப்பு

image

பந்தலூர்: சேரம்பாடி போலீசில் காவலராக உள்ள யோகேஸ்வரன் (29), நேற்று பந்தலூர் நீதிமன்றத்துக்கு பைக்கில் சென்றார். மண்டசாமிகோவில் அருகே வனப்பகுதியில் இருந்து வந்த யானை திடீரென அவரை துரத்தியது. பைக்கை வீசி ஓடிய அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இதனையடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News December 10, 2025

தொட்டபெட்டா சுற்றுலா தளத்திற்கு செல்ல தடை!

image

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தொட்டபெட்டா மலை சிகரத்திற்குச் செல்லும் சாலையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், இன்று (டிசம்பர்.10) சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. இதனையடுத்து, தொட்டபெட்டா காட்சி மனை ஒரு நாள் தற்காலிகமாக முட்டப்பட்டதால் சுற்றுலா பயணிகள் கவலை அடைகின்றனர்.

error: Content is protected !!