News April 21, 2025

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை: இன்றே கடைசி நாள்

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. புதுக்கோட்டையில் 110 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்றே (ஏப்.21) கடைசி நாளாகும். அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க..

Similar News

News October 31, 2025

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 489 கிராம ஊராட்சிகளிலும் நாளை (நவ.,1) கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் குடிநீர், வருவாய்த்துறை, மின்சாரம், மீன்வளம், நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட துறை அதிகாரிகள் பங்கு பெற உள்ள நிலையில் பொதுமக்கள் பங்கேற்று கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

News October 31, 2025

புதுக்கோட்டை: கூலித் தொழிலாளி மர்ம மரணம்

image

புதுக்கோட்டை, அடப்பன்வயலை சேர்ந்தவர் சுப்பிரமணி (65). இவர் நார்த்தாமலையில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று அங்குள்ள ஒரு பயணியர் நிழற்குடையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கீரனூர் போலீசார் தொழிலாளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News October 31, 2025

புதுக்கோட்டை: இனி வங்கி செல்ல தேவையில்லை!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

error: Content is protected !!