News April 20, 2025
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 58 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி. இங்கு <
Similar News
News November 25, 2025
திருப்பூரில் இளஞ்சிறாருக்கு நூதன தண்டனை

திருப்பூர் மத்திய காவல் நிலைய எல்லைக்குட்பட்டது தாடிகார் முக்கு பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு கமலராஜா என்பவர் கொலை வழக்கில் இளம் சிறார் பிடிக்கப்பட்டு கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் இளைஞர் நீதி குழும நடுவர் செந்தில்ராஜா. இளஞ்சிரார் 6 மாதம் திருப்பூர் அரசு மருத்துவமனை அவசர பிரிவில் மருத்துவர்கள் கூறும் வேலையை செய்ய தண்டனை விதித்துள்ளார்.
News November 24, 2025
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 283 மனுக்கள்

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் 283 மனுக்களை வழங்கியுள்ளனர். மனுக்களை பெற்ற மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அதனை விசாரணை மேற்கொள்ள பரிந்துரை செய்துள்ளார்
News November 24, 2025
காங்கேயம் அருகே வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது

காங்கேயம் சுற்று வட்டார பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் பேரில் ரோந்து சென்ற போலீசார் பரஞ்சேர்வழி பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட சுப்பிரமணி (58) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 20 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


