News March 20, 2025

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் 176 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் நாளை முதல் ஏப்.,21ஆம் தேதி வரை இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..

Similar News

News April 19, 2025

திருச்சி: கோடை கால சுற்றுலா செல்ல சூப்பர் இடம்!

image

திருச்சியில் அடிக்கிற வெயிலுக்கு இதமா எங்கயாச்சும் போய்ட்டு வந்தா நல்லா இருக்கும் என்று தோன்றுகிறதா? கவலையை விடுங்க. திருச்சிக்கு வடக்கே 80 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பச்சமலை, ஒரு பசுமையான மலைத்தொடராகும். நீர்வீழ்ச்சிகள், பசுமையான தோட்டங்கள் என பச்சை மலைக்கு ஏராளமான சிறப்பம்சங்கள் உள்ளன. திருச்சியில் இருந்து ஒரே நாளில் கிளம்பி சுற்றிப்பார்த்துவிட்டு வீடு திரும்ப இது சூப்பர் இடமாகும். SHARE!

News April 19, 2025

முதுநிலை நீட்தேர்வு விண்ணப்ப பதிவு தொடக்கம்

image

மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் மூலம் நடைபெறும் முதுநிலை நீட் தேர்வு இந்த ஆண்டு ஜூன்.15-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு திருச்சி உட்பட அனைத்து மாவட்டங்களிலும் தற்போது தொடங்கியுள்ளது. https://natboard.edu.in என்ற இணையதளத்தில் மே.7-ம் வரை விண்ணப்பிக்கலாம் மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

News April 19, 2025

போலி பதநீர் விற்பனை – சித்த மருத்துவ அலுவலர் எச்சரிக்கை

image

திருச்சி மாவட்ட முன்னாள் சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீப காலமாக பதநீர் அதிகம் விற்பனையாகிறது. இதில் அதிகம் போலியானவை. எனவே பதநீர் பருகும் போது எச்சரிக்கையுடன் வாங்க வேண்டும். பலர் பதநீருக்கு பதில் அதே சுவை கொண்ட பவுடர்களை சர்க்கரையில் சேர்த்து பதநீர் போல விற்பனை செய்கின்றனர். இதில் பொது மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!