News March 6, 2025

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு வெளிநாடு சுற்றுலா

image

போகலூா், முத்துவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற வானவில் மன்றம் வினாடி வினாப் போட்டியில் மாணவிகள் சுவாசிகா(11), கதிா்மதி(13) மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தனா். இவர்களுடன் 52 மாணவர்கள் (பிப்.23 – 28) மலேசியா, சிங்கப்பூா் நாடுகளுக்கு பள்ளிக்கல்வித் துறை சாா்பில் வெளிநாடு கல்விச் சுற்றுலா சென்று வந்தனா். இராமநாதபுரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த இந்நிகழ்வை *ஷேர் செய்யுங்கள்

Similar News

News September 15, 2025

ராமநாதபுரம்: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்குடாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <>இங்கு க்ளிக் செய்து<<>> அப்பளை பண்ணா போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 9489048910, 044-22280920 அழையுங்க. தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News September 15, 2025

ராமநாதபுரம்: ரூ.1 லட்சம் வாங்கி இலங்கை கூட்டி சென்ற மீனவருக்கு வலை

image

இலங்கை மன்னார் சேர்ந்த தாஸ் நேவிஸ் 43, மனைவி ரஜினி 42, மகன் யோசுவா 15, மகள்கள் ஏஞ்சலின் 14, அன்சிகா 8, மற்றும் சிவனேஸ்வரன் 50, ஆகியோர் 2022 ஜூன் 17ல் படகு மூலம் தனுஷ்கோடி வந்து மண்டபம் முகாமில் வசித்தனர். நேற்று முன்தினம் மண்டபத்தில் இருந்து கள்ளத்தனமாக நாட்டுப்படகில் இலங்கை சென்றபோது அந்நாட்டு கடற்படையிடம் சிக்கினர்.இவர்களிடம் ரூ. 1 லட்சம் கூலி வாங்கி அழைத்த சென்ற மீனவரை போலீஸ் தேடுகின்றனர்.

News September 15, 2025

முதுகுளத்துார்: மின்சாரம் பாய்ந்து 17வயது மாணவர் பரிதாப பலி

image

முதுகுளத்துார் பகுதியை சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன் மகன் ஹரிகார்த்திகேயன் 17, பிளஸ் 2 படித்தார். வெங்கலக்குறிச்சி கிராமத்தில் முருகன் கோயில் அருகே புதிதாக வீடு கட்டி வருகின்றனர்.வீட்டிற்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக மின்மோட்டார் பயன்படுத்தினர். அப்போது சுவிட்சை அணைக்காமல் மின் மோட்டாரை ஹரிகார்த்திகேயன் தொட்ட போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!