News March 26, 2025
அரசுப் பள்ளியில் இலவச மடிக்கணினிகள் திருட்டு

செங்கல்பட்டு நகராட்சியில், அறிஞர் அண்ணா அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 53 இலவச மடிக்கணினிகள் திருடு போயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிளஸ்-2 தேர்வு எழுதி முடிவிற்காக காத்திருக்கும் மாணவர்களில் சிலர் இந்த மடிக்கணினிகளை எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்பாக 12ஆம் வகுப்பு மாணவர்கள் 11 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 2, 2025
செங்கல்பட்டு: இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

‘டிட்வா’ புயல் காரணமாக இன்று (டிச.2) காலை 8 மணி வரை செங்கல்பட்டில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், செங்கல்பட்டில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் டி. சினேகா உத்தரவிட்டுள்ளார். ஷேர் பண்ணுங்க!
News December 2, 2025
தாம்பரம் – திருச்சி இடையே சிறப்பு ரயில் நீட்டிப்பு

தாம்பரம் – திருச்சி – தாம்பரம் இடையே தற்காலிகமாக இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில் (வண்டி எண்: 06190 / 06191) பயணிகளின் வசதிக்காக இன்று(டிச.2) முதல் வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ஞாயிறு, செவ்வாய், புதன், வெள்ளி, சனிக்கிழமை உள்ளிட்ட 5 நாட்கள் மட்டுமே இந்த ரயில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.