News April 17, 2025
அரசுத் தேர்வுக்கு இலவச பயிற்சி

திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் TNPSC மற்றும் TNUSRBஇல் வெளியான குரூப் 1 மற்றும் SI தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. அதற்கு விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு https://tamilnaducareerservices.tn.gov.in/ என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம். போட்டித் தேர்வுக்கு தயாராகும் நபர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க..
Similar News
News November 13, 2025
திருவாரூர்: மின்சாரம் தாக்கி வெல்டர் உயிரிழப்பு

காரியங்குடி பகுதியில் அடகுக் கடை ஒன்றில் ரஞ்சித், மணிகண்டன், சந்தோஷ் ஆகியோர் நேற்று வெல்டிங் வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் ரஞ்சித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் மணிகண்டன், சந்தோஷ் ஆகிய இருவரையும் திருவாரூர் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து திருவாரூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News November 13, 2025
திருவாரூர்: ஆதார் அட்டை திருத்தம் இனி ஈஸி!

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.மேலும் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <
News November 13, 2025
திருவாரூர்: ரூ.1 லட்சம் பரிசு வேண்டுமா?

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தின் கலை, கலாச்சாரம் மற்றும் இலக்கியத் திறனை மேம்படுத்தி உயர்த்தும் நோக்கில், சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளைத் தேர்வு செய்து தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக நலத்துறை அலுவலகத்தில் 25/11/2025-ம் தேதி மாலை 5 மணிக்குள்ளாக விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் ஆட்சியர் அறிவித்துள்ளார்.


