News March 20, 2024
அரக்கோணம் திமுக வேட்பாளர் இவர்தான்!

அரக்கோணம் திமுக மக்களவை தொகுதி வேட்பாளராக ஜெகத்ரட்சகன் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல்-2024 தமிழகத்தில் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச் 20) அக்கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
Similar News
News September 16, 2025
ராணிப்பேட்டை எஸ்.பி கடும் எச்சரிக்கை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்க தீவிர தணிக்கை மேற்கொள்ள எஸ்.பி. அய்மன் ஜமால் உத்தரவிட்டுள்ளார். மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டத்தில், சட்டவிரோத மணல் கடத்தல், சூதாட்டம், கள்ளச்சாராயம் மற்றும் லாட்டரி விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அவர் அறிவுறுத்தினார்.
News September 16, 2025
ராணிப்பேட்டையில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்

கிருஷ்ணகிரியில் இன்று (செப்.16) முகாம் நடைபெறும் இடங்கள்:
✅ ஆற்காடு நகராட்சி – சித்ரா மஹால், மறை மலை அடிகள் தெரு
✅ வாலாஜா நகராட்சி – நகராட்சி இருபாலர் பள்ளி, வாலாஜா
✅ அரக்கோணம் வட்டாரம் – ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளி, ஆண்டர்சன்பேட்டை, அம்மனூர்
✅ நெமிலி வட்டாரம் – ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கீழ்வெங்கடாபுரம்
✅ ஆற்காடு – ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கலர் கிராமம் (SHARE IT)
News September 16, 2025
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு ரோந்து நடவடிக்கை

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையால், 16.9.2025 அன்று இரவு பாதுகாப்பு பணிக்காக ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மற்றும் வாலாஜாபேட்டை சாலைகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பொறுப்பான காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர தேவைகளுக்கு கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியிடப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.