News September 14, 2024
அரக்கோணம் அருகே ரயிலில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்

டாட்டா நகரில் இருந்து அரக்கோணம் வழியாக எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அரக்கோணம் வந்தபோது ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரயிலின் பொதுப்பெட்டியில் ஏறி திடீர் சோதனை நடத்தினர் . அப்போது ரயிலின் சீட்டுக்கு அடியில் கேட்பாரற்று கிடந்த ஒரு பையை சோதனையிட்டதில் 6 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. கஞ்சாவை காஞ்சிபுரம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News October 16, 2025
ராணிப்பேட்டை: ஒரு புகாருக்கு ரூ.1,000-மிஸ் பண்ணாதீங்க!

ராணிப்பேட்டை மக்களே, நெடுஞ்சாலையில் நாம் உபயோகிக்கும் கழிவறைகள் பெரும்பாலும் முகம் சுளிக்க வைக்கும் நிலைதான். இதைத் தடுக்க மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. நெடுஞ்சாலையில் உள்ள கழிவறைகள் சுத்தமாக இல்லையெனில், அதனை புகைப்படம் எடுத்து,<
News October 16, 2025
ராணிப்பேட்டை: தந்தை மகன் கிணற்றில் குதித்து தற்கொலை

வாலாஜா அருகே, IT ஊழியர் ஒருவர் கடிதம் எழுதி வைத்து மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியள்ளது. காமராஜர் தெருவை சேர்ந்தவர் சுரேந்தர்(32) இவரது மகன் யாஷோ(6) பிறந்ததில் இருந்து மனவளர்ச்சி குன்றிய குழந்தை என்பதால், மனஉளைச்சலில் மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். ‘என் மகனின் நிலைதான் இதற்கு காரணம்’ என கடிதத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
News October 16, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அக்.16 இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.