News March 24, 2025
அரக்கோணத்தில் புகழ்பெற்ற குடைவரை கோவில்

அரக்கோணம் அடுத்த மகேந்திரவாடியில் உள்ள மகேந்திர விஷ்ணுகிருகம், மிகவும் பழமையான குடைவரை கோயில்களில் ஒன்றாகும். கி.பி. 600-630 ஆம் ஆண்டுகளில் மகேந்திரவர்மன் காலத்தில் குடையப்பட்ட குடைவரை, அவரது பெயரால் மகேந்திர விஷ்ணுகிருகம் என அழைக்கப்படுகிறது. தனித்துவமான சிற்பக்கலையுடன், வெட்டவெளியான இடத்தில் சிறுபாறையை குடையப்பட்டுள்ளது. அமைப்பு, பல்லவர் கால குடைவரை சிற்பக்கலையின் ஒரு அற்புத சின்னமாக திகழ்கிறது.
Similar News
News April 15, 2025
சாதனையாளர்களை உருவாக்கிய வாலாஜா பள்ளி

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 100 ஆண்டுகளை கடந்து செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் 2வது குடியரசு தலைவரான சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன் இங்கு தான் பயின்றார். தமிழ் மூதறிஞர் மு.வரதராசனார், முன்னாள் மிசோரம் மாநில ஆளுநர் பத்மநாபன், முன்னாள் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சம்பத் இங்கு கல்வி பயின்றுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தின் சிறப்பை மற்றவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News April 15, 2025
நடந்து சென்றவர் இரு சக்கர வாகனம் மோதி பலி

நெமிலி அங்காளம்மன் கோயில் அருகில் நேற்று இரவு இரு சக்கர வாகனம் மோதி 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பலியானார். நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் இறந்தவர் கரியாக்குடல் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பது இன்று போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.
News April 15, 2025
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சமூக ஊடகங்களில் போலி கணக்குகள் உருவாக்கப்படுவதைக் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றது. அவர்களின் சமீபத்திய அறிவிப்பில், “சமூக ஊடகத்தில் உங்கள் பெயரில் போலி கணக்கு உருவாக்கப்பட்டிருப்பதை கவனித்தால், உடனடியாக அந்த சமூக ஊடக சேவை வழங்குபவரைத் தகவல் தெரிவித்து, அந்தக் கணக்கை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.