News March 19, 2024
அரக்கோணத்தில் பாமக போட்டி?

பாஜக – பாமக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்தித்து பேசிய நிலையில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தம் கெயெழுத்தாகியுள்ளது. இதையடுத்து அரக்கோணத்தில் பாமக போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Similar News
News December 24, 2025
ராணிபேட்டை: டீசல் திருடிய 2 பேர் – கையும் களவுமாக கைது!

பெரப்பேரி பஸ் நிறுத்தத்தில் தனியார் கம்பெனி பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. அங்கு ஒருசில பஸ்களில், டீசல் திருடுவதாக பாணாவரம் போலீசாருக்கு பஸ் டிரைவர் ஒருவர் போலீசில் புகார் கொடுத்தார். இதனையடுத்து பாணாவரம் போலீசார் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போது பஸ்ஸில் டீசல் திருடியதாக நெமிலியை சேர்ந்த ரமேஷ், மகேந்திரவாடியை சேர்ந்த பிரகாஷ் ஆகியோரை நேற்று (டிச.23) கைது செய்தனர்.
News December 24, 2025
ராணிப்பேட்டை: சமையல் செய்த மூதாட்டிக்கு ஏற்பட்ட சோகம்!

ராணிப்பேட்டை: கல்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தம்மாள் (80). இவா் திங்கள்கிழமை மாலை தனது வீட்டில் சமையல் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக அவரது சேலையில் தீ பட்டதில் உடலில் பரவி கோவிந்தம்மாள் பலத்த காயமடைந்தாா். தொடா்ந்து சோளிங்கா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு உயிரிழந்தாா். இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
News December 24, 2025
ராணிப்பேட்டை: சிறுநீர் கழிக்கச் சென்ற சிறுவன் பலி!

ராணிப்பேட்டை: களப்பலாம்பட்டைச் சோ்ந்த சந்தோஷ் (8), 5-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இதற்கிடையே, நேற்று சந்தோஷ், அக்கிராமத்தின் அருகே கட்டப்பட்டு வரும் தொழிற்சாலைக்காக தோண்டப்பட்ட பள்ளம் அருகே சிறுநீா் கழித்துள்ளாா். அப்போது தவறி பள்ளத்தில் விழுந்ததில் அதில் இருந்த நீரில் மூழ்கி சந்தோஷ் உயிரிழந்தாா். இதுகுறித்து நெமிலி போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.


