News August 15, 2024
அய்யலூரில் 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

அய்யலூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் வெளியூர் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்தும் ஆட்டு வியாபாரிகள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.1 ஆடு ரூ.8,000 முதல் ரூ.10,000 வரை விற்பனையானது. ஆடி மாதம் கடைசி என்பதால் ஆடுகள் அதிகளவில் 3 கோடிக்கு விற்பனையானது. விலை அதிகரித்தால் ஆடு விற்பனைக்கு கொண்டு வந்த பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Similar News
News November 16, 2025
திண்டுக்கல்லில் சிறுவன் அதிரடி கைது!

திண்டுக்கல், சாணார்பட்டியை சேர்ந்தவர் கிஷோர் (24). இவர், வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை என சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்தனர். அதில், வடமதுரையை சேர்ந்த 17 வயது சிறுவன் உள்பட சிலர் மோட்டார் சைக்கிள் திருடியது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
News November 15, 2025
திண்டுக்கல் இன்றைய இரவு நேர ரோந்து காவலர்கள்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் சனிக்கிழமை இன்று (நவம்பர் 15) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் மற்றும் வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் போலீசார் பணியில் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல்துறைக்குரிய தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 15, 2025
ஆவாரம்பட்டியை சேர்ந்தவர் 18 ஆண்டுகளுக்கு பிறகு கைது

அம்மையநாயக்கனூரில் 2007ஆம் ஆண்டு நடந்த பொது சொத்தை சேதப்படுத்திய வழக்கில், ஆவாரம்பட்டி பகுதியை சேர்ந்த அழகுமலை (54) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. பின்னர் பிணையில் வெளிவந்த அவர், 18 ஆண்டுகள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு பிடியாணை (வாரண்ட்) பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, ஆய்வாளர் ஜெயபாண்டி தலைமையிலான போலீசார் அழகுமலையை கைது செய்து, நீதிமன்றக் காவலில் ஒப்படைத்தனர்.


