News October 23, 2024
அயோடின் உப்பில் சேர்க்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை

அயோடின் குறைபாட்டால் தைராய்டு, அறிவு குறைவு, மனக்கோளாறு, கருச்சிதைவு போன்றவை ஏற்படுகிறது. இவ்வாறான பிரச்சனைகளைத் தவிர்க்க அயோடின் கலந்த உப்புகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். எனவே உப்பு விற்பனை செய்பவர்கள் அயோடின் கலந்த உப்புகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனவும் அயோடின் இல்லாத உப்பு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாகை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் எச்சரித்துள்ளார்.
Similar News
News November 23, 2025
நாகை: வெளுக்க போகும் மழை – எச்சரிக்கை!

தென்கிழக்கு வாங்க் கடலில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது என்றும், இது வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.23) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News November 23, 2025
நாகையில் அதிகபட்சமாக 4.2செ.மீ மழை பதிவு

நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் பரவலாக விட்டுவிட்டு மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரங்கள் நாகை 4.2செ.மீ, திருப்பூண்டி 2.6செ.மீ, வேளாங்கண்ணி 3.9செ.மீ திருக்குவளை 3.4செ.மீ தலைஞாயிறு 1.6செ.மீ வேதாரண்யம் 3.8செ.மீ, கோடியக்கரை 2.6செ.மீ ஆகவும், மாவட்டத்தில் பதிவான மொத்த மழையின் சராசரி அளவு 3.1செ.மீ பதிவாகியுள்ளது
News November 23, 2025
நாகை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை -எச்சரிக்கை

நாகை மாவட்டத்தில் நேற்று(நவ. 22) இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. மேலும் வலுவடைய வாய்ப்புள்ளதால் மீனவர்கள் வருகின்ற நவ.24ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


