News April 3, 2025
அம்பை வட்டார விவசாயிகள் கவனத்திற்கு

அம்பை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கற்பகராஜ் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் விவசாயிகள் தங்கள் நில உடமை ஆகியவற்றை விண்ணப்பித்து அடையாளம் பெறுவது அவசியம். இதற்கு அடுத்த மாதம் 31ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில், விவசாயிகள் நலன் கருதி ஏப்ரல் 15 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி அனைத்து விவசாயிகளும் கட்டாயம் அடையாளம் பெற வேண்டும் என்றார்.
Similar News
News November 6, 2025
நெல்லை: ம.சு பல்கலையில் வினாத்தாள் மாறியதால் குழப்பம்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 60 மையங்களில் இன்று பி.காம் 3ம் ஆண்டு மேனேஜ்மென்ட் அக்கவுண்ட் அரியர் தேர்வு நடைபெற்றது. இந்த வினாத்தாளுக்கு பதில் ரீடைல் மேனேஜ்மென்ட் என்ற வினாத்தாள் தவறுதலாக மாற்றி வழங்கப்பட்டது. இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக சரியான வினாத்தாள் வழங்கப்பட்டு கூடுதல் அவகாசம் வழங்கி தேர்வு நடத்தப்பட்டது.
News November 6, 2025
JUST IN: நெல்லையில் தோற்றால் பதவி பறிப்பு – ஸ்டாலின் அதிரடி!

நெல்லையில் உடன்பிறப்பே வா நடைபெற்ற நிகழ்வில் நெல்லை, தென்காசி மாவட்ட திமுக நிர்வாகிகளை மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அப்போது நெல்லையில் தோற்றால் பதவி பறிக்கப்படும் என மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை. நெல்லையில் நயினார் நாகேந்திரன் மறுபடியும் போட்டியிட வாய்ப்புள்ளது. எனவே நெல்லையில் தோற்றால் பதவி பறிக்கப்படும் என திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
News November 6, 2025
நெல்லை: இனி RTO ஆபீஸ்க்கு அலைய வேண்டாம்.!

நெல்லை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <


