News December 6, 2024
அம்பேத்கர் நூலை இன்று வெளியிடுகிறார் விஜய்

ஆதவ் அர்ஜுனா நிறுவனம் சார்பில், ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூல் வெளியீட்டு விழா இன்று (டிச.6) சென்னையில் நடைபெறுகிறது. இந்த புத்தகத்தை, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக்கொள்கிறார். மேலும், அம்பேத்கரின் பேரனும், சமூக செயற்பாட்டாளருமான ஆனந்த் டெல்டும்டேவும் இந்த புத்தகத்தை பெற்றுக்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 30, 2025
சென்னையில் ரூ.5,000 அபராதம்!

சென்னை மாநகராட்சியில் நாய்கள் & பூனை வளர்ப்பவர்கள் கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில், உரிமம் பெறாமல் இருப்பவர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் எனவும், நாய்கள் வெளியில் செல்லும் போது கழுத்து பட்டை இல்லை என்றால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இது நவம்பர் 24 தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
News October 30, 2025
சென்னை: வீட்டில் தீ விபத்து!

சென்னை ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மருத்துவர் ஆனந்த் பிரதீப் வசித்து வருகிறார். அதிகாலை 4 மணியளவில் இவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், மருத்துவர் ஆனந்த் பிரதீப்பின் மனைவி ஷாஜி பாலா (58) பரிதாபமாக உயிரிழந்தார். மின் கசிவால் விபத்து ஏற்பட்டதா அல்லது சிலிண்டர் கசிவால் விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்தில் கிண்டி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
News October 30, 2025
சென்னை: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.


