News December 6, 2024
அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்திய அமைச்சர் பொன்முடி

சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினத்தை ஒட்டி விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் வனத்துறை அமைச்சர் பொன்முடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் லட்சுமணன் எம்.எல்., மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், மாவட்ட திமுக பொருளாளர் ஜனகராஜ், நகர்மன்றத் தலைவர் தமிழ்ச்செல்வி, நகர செயலாளர் சக்கரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Similar News
News November 1, 2025
விழுப்புரம் : தேர்வு இல்லாமல் வங்கி வேலை!

விழுப்புரம் மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் <
News November 1, 2025
விழுப்புரம்: கஞ்சா விற்று வாலிபர் கைது

விழுப்புரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திண்டிவனம் போலீசார் சஞ்சீவி ராயப்பேட்டை ரோந்து சென்றனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த அபினேஷ் என்பவர் கஞ்சா விற்றது தெரியவந்தது அவரை கைது செய்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 120 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
News November 1, 2025
விழுப்புரம்: வீடு தேடி ரேஷன் – ஆட்சியர் தகவல்

விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் “தாயுமானவர்” திட்டத்தின் கீழ் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி, நவ. 3, 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் அவர்களது இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்படும்.


