News August 25, 2024
அம்பத்தூரில் பாழடைந்த பங்களாவுக்குள் இறந்தநிலையில் பெண் சடலம்

அம்பத்தூர் டன்லப் மைதானத்தின் அருகே பாழடைந்த கட்டிடத்தில் இறந்த நிலையில் பெண் ஒருவரின் சடலத்தை போலீசார் மீட்டனர். கும்பகோணத்தை சேர்ந்த அந்த பெண்ணும், பெரம்பூரைச் சேர்ந்த ராஜா என்பவரும் பல்மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளனர். பெண்ணின் கணவர், குழந்தையுடன் பேசக்கூடாது என்று ராஜா கண்டிப்புடன் சொல்லியிருக்கிறார். இதில் கள்ள ஜோடிக்கு தகராறு முற்றி, ஆத்திரமடைந்த ராஜா, பெண்ணை கொலை செய்துள்ளார்.
Similar News
News November 20, 2025
திருவள்ளூர்: வேலை வேண்டுமா..? இங்க போங்க!

திருவள்ளூர்: சென்னை, கிண்டி பெண்கள் ஐடிஐ வளாகத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை(நவ.21) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமல் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. இதுகுறித்து விவரங்கள் அறிய 9499966026 எனும் எண்ணை அழைக்கலாம் அல்லது <
News November 20, 2025
திருவள்ளூர்: லாரியை மறித்து வழிப்பறி!

திருவள்ளூர்: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவா(26). இவர், சென்னை, கொடுங்கையூரில் உள்ள லாரி டிரான்ஸ்போர்ட்டில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், இவர் புழல் சாலையில் வந்து கொண்டிருந்தபோது, லாரியை மடக்கிய இருவர் , கத்தியை காட்டி ரூ.2,000 மற்றும் செல்போனை பறித்துச் சென்றனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார், வேல்முருகன்(24), விமல்குமார்(26) ஆகியோரைக் கைது செய்தனர்.
News November 20, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (19.11.2025) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க


