News April 16, 2025
அமைதி தரும் மரக்காணம் கடற்கரை

விடுமுறை தினத்தில் வெளியில் சென்று வர அருகிலேயே சிறந்த சுற்றுலா தலமாக மரக்காணம் கடற்கரை உள்ளது. கீழக்கு கடைகரையோரம் அமைந்துள்ள இந்த பகுதியின் அமைதியான சூழல் மனதுக்கு அமைதி தரும். அமைதியை விரும்புவோர் நிச்சயம் சென்று வரலாம். இங்குள்ள உப்புத் துறை இந்த கடற்கரையின் மிகவும் பிரபலமான ஒன்றாகும். இப்பவே உங்க நண்பருக்கு ஷேர் பண்ணி ட்ரிப்க்கு பிளான் பண்ணுங்க
Similar News
News January 3, 2026
விழுப்புரம்: 12th படித்தால் ஆதாரில் வேலை ரெடி!

விழுப்புரம் மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இங்கு <
News January 3, 2026
விழுப்புரம்: மனைவி கண்முன்னே கணவர் பலி!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் தனது மனைவி, மகனுடன் விழுப்புரத்தில் இருந்து திருக்கோயிலூர் மார்க்கமாக சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது, மூகையூர் அருகே எதிரே வந்த லாரி மோதி கார் விபத்துக்குள்ளானது. இதில், முருகன் தனது மகன், மனைவி கண்முன்னே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அரகண்டநல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 3, 2026
விழுப்புரம்: பெண்களிடம் குடிமகன் தகராறு!

செஞ்சி அருகே நேற்று ஒரு வீட்டு வாசலில், லோகேஷ் (23) போதையில் படுத்திருந்தார். அவரை அங்கிருந்து போகும் படி, அந்த வீட்டின் பெண்கள் கூறிய நிலையில், ஆத்திரமடைந்த அவர் கம்பியால் தன்னை குத்தி காயப்படுத்திக்கொண்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், கிராம பெண்கள் அனைவரும் அப்பகுதியில் உள்ள மதுபான கடையை முற்றுகையிட்டனர். பின்னர் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதும் கலைந்து சென்றனர்.


