News April 28, 2025
அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு

முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பால்வளத்துறை அமைச்சருமான ஆர்.எஸ் இராஜகண்ணப்பனுக்கு நேற்று (ஏப்.27) அமைச்சர் பொன்முடி வகித்து வந்த வனத்துறை மற்றும் காதி துறையை கூடுதலாக ஒதுக்கீடு செய்து ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. இதனையடுத்து அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News December 23, 2025
இராம்நாடு: தனியார் பேருந்தில் 31 பவுன் நகை கொள்ளை

திருவாடானை அருகே கீழக்குடியைச் சேர்ந்தவர் தொண்டியம்மாள்(50). இவர் தனது பேரன் பிறந்த நாள் விழாவுக்காக கோவை சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு தனியார் பேருந்தில் ஊருக்குப் புறப்பட்டார். நேற்று காலை பேருந்து திருவாடானைக்கு வந்தது. அப்போது தொண்டியம்மாள் தனது பையைப் பார்த்தபோது, அதிலிருந்த 31 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடியது தெரியவந்தது. திருவாடானை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News December 23, 2025
ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் அறிவிப்பு

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இன்று (டிச-23) ஒரு விசைப்படகு, 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இலங்கை கடற்படையில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை படகுகளையும் விடுதலை செய்ய கோரி டிச- 26ம் தேதி காலை 10.00 மணி அளவில் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
News December 23, 2025
இராமநாதபுரம்: இலவச நான்கு சக்கர வாகனம் பயிற்சி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து, இராமநாதபுரம் பூ மாலை வணிக வளாகம் புது பஸ்ஸ்டாண்ட் அருகில், வருகின்ற டிச.26ம் தேதி இலவச நான்கு சக்கர வாகனம் ஓட்டுநர் பயிற்சி நடைபெற உள்ளது. இந்த பயிற்சியானது 30 நாட்களுக்கு நடைபெறும். பயிற்சி நேரம்: 9:30 AM – 5.00 PM வரை. மேலும், தகவலுக்கு 9087260074, 8056771986 தொடர்பு கொள்ளவும்.


