News November 25, 2024
அமைச்சர் முன்னிலையில் நாதகவினர் திமுகவில் இணைவு

நாம் தமிழர் கட்சியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த ராமச்சந்திரன் மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகினர். இந்த நிலையில் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் நேற்று சூலூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். பின் அவர்களை அமைச்சர் செந்தில்பாலாஜி வரவேற்றார்.
Similar News
News December 12, 2025
கோவை: தங்கம் பதக்கத்தை தட்டி தூக்கிய சிறுவன்!

கோவை பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் அமைந்துள்ள சோமையம்பாளையத்தில் 3-ம் வகுப்பு மாணவன் ஆத்விக், சென்னையில் அண்மையில் நடைபெற்ற 35-வது மாநில ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் 10 வயதுக்குட்பட்ட இன்லைன் ஸ்பீட் பிரிவில் தங்கம் வென்று கோவைக்கு பெருமை சேர்த்தார். இதனையடுத்து பள்ளி ஆசிரியர்கள், பயிற்சியாளர் உள்ளிட்ட பலரும் மாணவனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
News December 12, 2025
கோவை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

விவசாயிகளுக்கான மாதாந்திர குறைகேட்புக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் டிசம்பா் 19-ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று விவசாயம் தொடா்பான பிரச்னைகளை மனுவாக சமா்ப்பிக்கலாம். இதில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் வெளியிட்ட தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
News December 12, 2025
கோவை: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் <


