News December 4, 2024

அமைச்சர் மீது சேறு வீசியது குறித்து வானதி அறிக்கை

image

கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. மூன்றரை கால திமுக ஆட்சியில் தமிழக மக்கள் ஆட்சிமீது கடும் கோபத்தில் உள்ளனர். இதற்கு சாட்சியே விழுப்புரம் மாவட்டத்தில் அமைச்சர் மீது சேறு வீசபட்டது வீசப்பட்டது. உள்ள நாட்களையாவது மக்களுக்கான ஆட்சியை அரசு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Similar News

News December 6, 2025

கிணத்துக்கடவு அருகே பயங்கர விபத்து: மாணவர் பலி

image

கிணத்துக்கடவு அருகே லாரி மீது பைக் மோதியதில் பைக்கில் சென்ற 4 கல்லூரி மாணவர்கள் பலத்த காயம் அடைந்தனர். உடனே அவர்களை மீட்டு கோவை மற்றும் பொள்ளாச்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதித்தனர். இதில், ஜெகன் (21) என்ற மாணவன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இவ்விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

News December 5, 2025

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (05.12.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 5, 2025

CLARIFICATION: தவறுதலாக இடம்பெற்ற MLA புகைப்படம்

image

சேலம் காமனேரியில், மூதாட்டி ஒருவரை முன்னாள் MLA அர்ஜுனன் தாக்கியதாக ஒரு செய்தி நேற்று வெளியானது. அப்போது அந்த வீடியோவுடன், தற்போது கோவை வடக்கு MLA-வான அம்மன் K.அர்ஜுனன் படம் தவறுதலாக பதிவிடப்பட்டு பின் நீக்கப்பட்டது. செய்திகளை கவனமுடன் பதிவிட்டும் இந்த தவறு நிகழ்ந்ததற்காக வருந்துகிறோம். மேற்கண்ட சம்பவத்துக்கும் MLA அம்மன் K.அர்ஜுனனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

error: Content is protected !!