News April 17, 2025

அமைச்சர் பொன்முடி மீது காவல் நிலையத்தில் புகார்

image

இந்து மதம் தொடர்பான வனத்துறை அமைச்சர் பொன்முடி பேச்சை கண்டித்து அறந்தாங்கி காவல் நிலையத்தில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் கவிதா ஸ்ரீகாந்த்  தலைமையில் அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பாரதிய ஜனதா கட்சி நகர ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இருந்தனர்.

Similar News

News July 11, 2025

புதுகை: பயிர் காப்பீடு திட்டத்தில் பதிய அறிவுறுத்தல்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் குருவை மற்றும் காரிப் பயிர்களுக்கு ஜூலை 31ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார். இந்த திட்டத்தில் பயிர் கடன் பெறும் விவசாயிகள், கடன் பெறும் வங்கிகளிலும், கடன் பெறாத விவசாயிகள் பொதுசேவை மையங்கள் மூலமாகவோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் வணிக வங்கிகள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். (ஷேர் பண்ணுங்க)

News July 10, 2025

புதுகையில் நாளை வேலைவாய்ப்பு முகாம்!

image

புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், நாளை (ஜூலை 11) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில், காலை 10 முதல் 15 மேற்பட்ட முக்கிய நிறுவனங்கள் பங்கேற்கும். இம்முகாமில் 18 முதல் 35 வயதுக்குள்பட்ட 10ஆம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் மு.அருணா தெரிவித்துள்ளார். இதை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்..!

News July 10, 2025

புதுகை: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் வரை காப்பீடு

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

error: Content is protected !!