News March 17, 2025
அமைச்சர் பெரியகருப்பன் மீதான வழக்கு ரத்து

சிவகங்கை: கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது திருப்பத்தூர் தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக, அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மீது கண்டவராயன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் பெரியகருப்பன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜி.கே.இளந்திரையன், அமைச்சர் மீதான வழக்கை இன்று ரத்து செய்து உத்தரவிட்டார்
Similar News
News April 19, 2025
பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி ஸ்தல வரலாறு

கார்த்திகை பெண்கள் ஆறு பேருக்கு சிவபெருமான் அஷ்டமா சித்திகளை போதிக்கும்போது, கார்த்திகை பெண்கள் திரும்பி இருந்ததால் கோபமுற்று அவர்களை பட்டமங்கலம் என்ற இந்த ஸ்தலத்தில் ஆயிரம் ஆண்டுகள் ஆல இலைகளால் மூடப்பட்டு கல்லாக இருக்கும் படி சபித்தார். பின்னர் சிவனே ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு இவ்விடத்திற்கு வந்து அஷ்டமா சித்திகளை போதித்தார். எனவே இந்த ஸ்தலத்திற்கு அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி என்ற பெயர் வந்தது.
News April 19, 2025
சிவகங்கை மாவட்டத்தின் சிறந்த 10 சுற்றுலா தலங்கள்

▶️பிள்ளையார் பட்டி கோயில்
▶️வேட்டங்குடி பறவைகள் சரணாலயம்
▶️கீழடி பாரம்பரிய அருங்காட்சியகம்
▶️செட்டியார் மாளிகை
▶️வேலுநாச்சியார் நினைவுச்சின்னம்
▶️ஆயிரல் ஜன்னல் வீடு
▶️கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம்
▶️இடை காட்டூர் தேவாலயம்
▶️குந்திரன்குளி கோயில்
▶️சிவகங்கை அரண்மனை
*நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*
இதில் குறிப்பிட்டவைகளை தவிர்த்து உங்களுக்கு தெரிந்த சிவகங்கை மாவட்டத்தின் சிறந்த இடத்தினை நீங்கள் கூறலாம்.
News April 18, 2025
பரியாமருதுபட்டி நந்தீஸ்வரர் வரலாறு தெரியுமா?

சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை என்னும் சிற்றூரின் அருகிலுள்ளது பரியாமருதுபட்டி நந்தீஸ்வர கோயில். இந்த ஆலயம், 1829-ம் வருடம் நகரத்தாரால் கட்டப்பட்டது. மகாபாரதப் போரில் காயமடைந்த பாண்டவர்கள், இந்தத் தலத்தின் மண்ணை அள்ளி காயங்களின் மேல் பூச, உடனே ஆறியதாக குறிப்புகள் உண்டு. இங்குள்ள நெய் நந்தீஸ்வரரிடம் வேண்டிக்கொண்டு, நெய் வாங்கி அபிஷேகம் செய்தால் எண்ணியது நிறைவேறும் என்பது நம்பிக்கை. Share It.