News March 25, 2024
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன்-மூர்த்தி

தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவில்லை என்றால் தனது அமைச்சர் பதவி, எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வேன் என அமைச்சர் மூர்த்தி பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று அலங்காநல்லூரில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய அமைச்சர் மூர்த்தி கட்சிக்கு துரோகம் செய்யாமல் உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
Similar News
News April 19, 2025
போலீஸ் எஸ்.ஐ., தேர்வுக்கு இலவச பயிற்சி

மதுரை, மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் போலீஸ் எஸ்-ஐ தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 23ம் தேதி முதல் துவங்கப்படவுள்ளது. விரும்புவோர் ஆதார் அட்டை மற்றும் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் வேலைவாய்ப்பு மையத்தை நேரில் அனுகவும். தங்களது சுய விவரங்கள் பதிவேற்றம் செய்து பாடக்குறிப்புகளை இந்த <
News April 19, 2025
கடத்தப்பட்ட தொழிலதிபர் ! சினிமா பாணியில் சேஸிங் செய்து மீட்பு…

மதுரையில் இடத் தகராறு காரணமாகக் கடத்தப்பட்ட தொழிலதிபர் கருமுத்து சுந்தரம் மீட்கப்பட்டார். பீ.பீ குளத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஏப்.6 மர்மநபர்களால் கடத்தப்பட்டார். இந்நிலையில் இன்று மதுரை, பாண்டி கோயில் பாலம் அருகே போலீசார் விரட்டி பிடித்து 2 பேரைக் கைது செய்தனர். கடத்தல் தொடர்பாக ஏற்கெனவே 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் இருவர் கைது.
News April 19, 2025
லாரியில் சிக்கி 5 கி.மீ., இழுத்து செல்லப்பட்ட இளைஞரின் உடல்

மதுரை, வாடிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சூரியபிரகாஷ் 30. இவருக்கு மனைவி பிரியா 25, 2 மகள்கள் உள்ளனர். நேற்று அதிகாலை வாடிப்பட்டியிலிருந்து டூவீலரில் சென்றபோது ஆண்டிபட்டி பங்களா அருகே மதுரை நோக்கி சென்ற லாரியின் பின் சக்கரத்தில் மோதி டூவீலருடன் சிக்கி உடல் 5 கி.மீ. வரை இழுத்து செல்லப்பட்டது. லாரியில் உடல் சிக்கி இருப்பதை கண்ட சிலர் டூவீலரில் சென்று தகவல் தெரிவித்த பின்பு தான் டிரைவருக்கு தெரியவந்தது.