News January 24, 2025
அமைச்சர் சக்கரபாணி வாழ்த்து

ஜனவரி 24 இன்று “தேசிய பெண் குழந்தைகள் தினம் ” மேலும் “ஆணுக்குப் பெண் இலைப்பிள்ளை காண் ” என்ற மகாகவியின் வரிகளுக்குகேற்ப இன்று பெண்கள் சாதனை படைக்காத துறைகளே இல்லை எனலாம், பெண் குழந்தைகளுக்கான வாய்ப்புகளை தொடர்ந்து வழங்குவதும், பெண் குழந்தைகளின் உரிமைகளை உறுதிப்படுத்துவதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும் என்று அமைச்சர் சக்கரபாணி தனது சமூக வலைதள இன்ஸ்டா பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளார்.
Similar News
News December 5, 2025
திண்டுக்கல்லில் ஒரே நாளில் நடந்த பயங்கர சம்பவம்!

திண்டுக்கல் இந்திரா நகர் மாரிமுத்து (50) நேற்று முன்தினம் வெளியில் சென்றபோது, மர்மநபர் வீட்டில் நுழைந்து பீரோவில் இருந்த 16 பவுன் நகைகளை திருடினார். அதேநாள் சொப்பணதேவி வீட்டில் ரூ.1 லட்சமும் திருடப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் சிசிடிவி மூலம் மேட்டுப்பட்டி எம்ஜிஆர் நகர் சதீஷ்குமார் (24) என்பவரை திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர். திருடப்பட்ட நகை, பணமும் மீட்கப்பட்டன.
News December 5, 2025
திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே சடலம்!

திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே உள்ள ஏ.டி.எம். முன்பு கடந்த 2ம் தேதி ஒருவர் மரணம் அடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். தகவலறிந்த வடக்கு போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில் அவர் கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி உதயகுமார்(48) என்பதும், சில மாதங்களுக்கு முன்பு வீடு விட்டு வெளியேறியதும் தெரியவந்தது. அவர் எப்படி இறந்தார் என்பதை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 5, 2025
திண்டுக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (டிச 4) இரவு 10 மணி முதல் நாளை (டிச. 5) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் ஊரகம், திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள காவல் துறை அதிகாரியின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.


