News August 7, 2024
அமைச்சர்கள் வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவு

அமைச்சர்கள் KKSSR ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் இருவரும் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில் நீதிபதி வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். 2022ம் ஆண்டு KKSSR & தங்கம் தென்னரசை விடுவித்து ஸ்ரீவி., நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 5, 2025
EXCLUSIVE விருதுநகரில் அதிரடி நடவடிக்கை

விருதுநகர் மாவட்டத்தில் 2024-ம் ஆண்டில் ஏற்பட்ட 6246 விபத்துகளில் 500 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இனி மது அருந்தி வாகனம் ஓட்டினால் லைசென்ஸ் ரத்து, குற்றவியல் வழக்கு உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் ஆட்சியர் ஜெயசீலன் எச்சரிக்கை விடுத்திருந்தார். அதன்படி 1.5.2025 – 31.8.2025 வரை மது அருந்தி வாகனம் ஓட்டிய 117 ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிக தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளது.
News December 5, 2025
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

விருதுநகர் மாவட்ட அளவிலான பிரதமர் மந்திரி தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் வரும் எட்டாம் தேதி அன்று அரசினர் தொழிற்பெயர்ச்சி நிலையம் விருதுநகரில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. தொழில் பழகுநர் சேர்க்கை முகாமில் அரசு/ பிரபல முன்னணி தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தகவல் தெரிவித்துள்ளார்.
News December 5, 2025
விருதுநகர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

விருதுநகர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


