News March 25, 2025

அமைச்சரை சந்தித்த நகர மன்ற தலைவர்

image

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன் இன்று சென்னையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும் கே.என்.நேருவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இன்று சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Similar News

News April 1, 2025

திருப்பூரில் கனமழை அறிவிப்பு!

image

திருப்பூரில் கோடை வெயிலின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே கடந்த சில தினங்களாக, திருப்பூர் மாவட்டத்தின் சில இடங்களில், பரவலாக மழைபெய்து வருகிறது. இந்நிலையில், வரும் 4, 5 ஆகிய தேதிகளில், மாவட்டத்தில் சில இடங்களில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.

News April 1, 2025

கோடை வெயிலின் கறிக்கோழிகளை காப்பாற்றலாம்

image

பல்லடம் சுற்றுவட்டாரத்தில் விவசாயத்திற்கு மாற்று தொழிலாக கோழிப்பண்ணை தொழில் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. இந்நிலையில் தற்போது கோடை வெயிலின் தாக்கத்தால் கோழிகள் மிகவும் சோர்வடைந்து காணப்படுகின்றன. இதனால் கறிக்கோழிகளின் இறப்பு 5% இருந்து 10% உயர வாய்ப்புள்ளது. இதனை தடுக்க காற்றோட்டமான சூழ்நிலையையும் தண்ணீர் தெளிப்பான்களைக் கொண்டு தண்ணீர் பீச்சி அடித்தும் கோழிகளைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கலாம்.

News April 1, 2025

நினைத்தது நடக்குனுமா! இங்கு போங்க

image

திருப்பூர், ஊத்துக்குளி சாலையில் சுமார் 2500 ஆண்டுகள் பழமையான, சுக்ரீஸ்வரர் கோயில் உள்ளது. ஸ்ரீராமருக்கு உதவியாக இருந்த சுக்ரீவன், இங்கு ஈஸ்வரனை பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் மூலவருக்கு சுக்ரீஸ்வரர் என்று பெயர் வந்ததாம். இங்கு பஞ்ச பூதங்களையும் குறிக்கும் வகையில், பஞ்சலிங்கங்கள் இக்கோயிலில் உள்ளன. கலியுகத்தில் தேவர்களாலும், அரசர்களாலும் வணங்கப்பட்ட சுக்ரீஸ்வரரை, நாம் வணங்கினால் நினைத்து நடக்குமாம்.

error: Content is protected !!