News September 28, 2024
அமைச்சருடன் காங்.எம்எல்ஏ திடீர் சந்திப்பு

செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் சுவாமிநாதன் நேற்று (செப்.27) நெல்லை வந்தார். அவரை காங்கிரஸ் கட்சியின் மாநில பொருளாளரும் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் சந்தித்து பொன்னாடை அணிவித்து வரவேற்றார். பின்னர் இருவரும் சிறிது நேரம் கலந்துரையாடினர். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அமைச்சர் புறப்பட்டு சென்றார்.
Similar News
News December 1, 2025
நெல்லை: நூலிழையில் உயிர் தப்பிய தொழிலாளி

தச்சநல்லூர் தேநீர் குளத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி பேச்சிமுத்து (42). இவரை முன் பகை காரணமாக நேற்று தச்சநல்லூரை சேர்ந்த சங்கர் (38) என்பவர் தச்சநல்லூர் சாய்பாபா கோவில் அருகே வழிமறித்து அருவாளால் வெட்டிக் கொல்ல முயன்றார். அவர் தப்பியோடி சென்று அளித்த புகாரின் படி தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து சங்கரை கைது செய்தனர்.
News December 1, 2025
நெல்லை: மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி

அம்பை அருகே மேல ஏர்மால்புரத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 50). விவசாய தொழிலாளியான இவர் இன்று காலை அதே பகுதியில் உள்ள தனது உறவினர் தோட்டத்தில் மின் பழுதை சரி செய்தபோது ஸ்டே கம்பியை தொட்டதால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுக்குறித்து அம்பாசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை.
News December 1, 2025
நெல்லை: ரூ.21,700 சம்பளத்தில் அரசு வேலை., மீண்டும் வாய்ப்பு..!

நெல்லை மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 3058 Clerk பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகின. இதற்கு விண்ணப்ப கடைசி தேதி நவ. 27 அன்று முடிவடைய இருந்த நிலையில், தற்போது டிச 4 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 18 – 30 வயதுகுட்பட்ட 12th தேர்ச்சி பெற்றவர்கள் இங்கு <


