News April 12, 2025
அமைச்சரின் பேச்சுக்கு ஜான்பாண்டியன் கண்டனம்

அமைச்சர் பொன்முடியின் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான ஆபாசமான பேச்சு மிகவும் கண்டிக்கத்தக்கது. ஒரு பொறுப்புமிக்க அமைச்சராக, சமூகத்தில் பெண்களுக்கு மரியாதையையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியவர், இத்தகைய அநாகரிகமான பேச்சால் சமூக மதிப்புகளை சீர்குலைக்கிறார்.
இது பெண்களின் கண்ணியத்திற்கு எதிரான செயல் என தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் இன்று கன்னடம் தெரிவித்துள்ளார
Similar News
News September 18, 2025
நெல்லை மாவட்ட விவசாயிகளுக்கு கலெக்டர் அழைப்பு

நெல்லை மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற செப்டம்பர் 26ம் தேதி காலை 10:30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. அனைத்து துறை அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். எனவே மாவட்டத்தின் அனைத்து பகுதி விவசாயிகளும் பங்கேற்று பயனடையலாம் என மாவட்ட கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.
News September 18, 2025
மனநல நிறுவனங்கள் மனநல ஆணையத்தில் பதிவு செய்ய உத்தரவு

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில்; விரைவில் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் மனநல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு மையங்கள் ஆகியவை முறையாக பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அனைத்து நிறுவனங்களும் மாநில மனநல ஆணையத்தில் பதிவு செய்ய உத்தரவு.
News September 18, 2025
நெல்லையில் 186 புதிய வாக்கு சாவடிகள்

நெல்லை மாவட்டத்தில் 1,490 வாக்குச்சாவடிகளில் 375 பிரிக்கப்பட்டு, 186 புதியவை சேர்க்கப்பட்டு மொத்தம் 1,676 ஆக உயர்கிறது. 189 வாக்குச்சாவடிகள் மறுசீரமைக்கப்படும். 26 இடங்கள் மாற்றம், 10 பழுதடைந்த கட்டிடங்கள் மாற்றியமைப்பு, 6 பள்ளிகளின் பெயர் மாற்றம் உத்தேசிக்கப்பட்டுள்ளது. கருத்துகள், ஆட்சேபனைகளை ஒரு வாரத்தில் வாக்காளர் பதிவு அலுவலரிடம் தெரிவிக்கலாம் என கலெக்டர் சுகுமார் கேட்டுக்கொண்டார் .