News August 2, 2024
‘அமராவதி ஆற்றில் குதித்து கண்ணீர் விடுகின்ற போராட்டம்’

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள அமராவதி ஆற்றில் ஆய்வு மேற்கொள்வதற்காக நேற்று வருகை புரிந்த பாஜக மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ் கூறுகையில், அமராவதி ஆற்றில் மூன்று நாட்களாக மூன்று டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்து வருகிறது. இங்குள்ள உப்பாறு அணை காய்ந்து கிடக்கிறது. எனவே உப்பாறு அணைக்கு தண்ணீர் விடவில்லை என்றால் தண்ணீரில் இறங்கி கண்ணீர் விடுகின்ற போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.
Similar News
News December 10, 2025
திருப்பூரில் மூதாட்டிக்கு நேர்ந்த விபரீதம்!

திருப்பூர் தேவாங்குபுரம் பகுதியை சேர்ந்தவர் நித்யகல்யாணி(74). இவர் நேற்று ரவுண்டானா பகுதியில் கடைக்கு காய்கறி வாங்க வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் நித்யகல்யாணி அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இது குறித்து வடக்கு குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை, கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் தேடி வருகின்றனர்.
News December 10, 2025
திருப்பூரில் திருநங்கை கொலை! இருவர் அதிரடி கைது!

திருப்பூர் காலேஜ் ரோட்டைச் சேர்ந்தவர் திருநங்கை ஸ்ரேயா. இவருக்கும் அருகில் வசித்து வந்த சுப்பிரமணியன் என்பவரது குடும்பத்திற்கும் தகராறு இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், சுப்பிரமணியம் தள்ளிவிட்டதில் ஸ்ரேயா தலையில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரேயா உயிரிழந்தார். இதனால் சுப்பிரமணியன், அவரது மகன் சரவணனை போலீசார் கைது செய்தனர்.
News December 10, 2025
திருப்பூர்: ரோடு சரியில்லையா? உடனே இத பண்ணுங்க!

திருப்பூர் மக்களே, உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து <


