News January 24, 2025
அபராதம் விதிக்கும் e-challon கருவி

காரைக்கால் மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்க போக்குவரத்து போலீசார் மட்டுமின்றி சட்டம்-ஒழுங்கு போலீசாரும் அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதையடுத்து எஸ்பிக்கள் சுப்ரமணியன், பாலச்சந்திரன் ஆகியோரது முன்னிலையில்காவல் நிலைய அதிகாரிகளுக்கு e-Chellan கருவிகளை மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லக்ஷ்மி சௌஜன்யா வழங்கினார் வழங்கினார்.
Similar News
News October 31, 2025
புதுச்சேரியில் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

புதுச்சேரி அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தின் சார்பில், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் 175 ஊழியர்களை பணி நிரந்தரம் செய்துவிட்டு, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் மூலம் மீதமுள்ள பணியிடங்களை மட்டும் பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்; பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முத்தியால்பேட்டை திட்ட அலுவலகம் எதிரில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
News October 31, 2025
புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்வு!

புதுவையில் வீடுகளுக்கு முதல் 100 யூனிட் வரை, 1 யூனிட்டுக்கு ரூ.2.70-ஆக இருந்த மின் கட்டணம் தற்போது ரூ.2.90-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 101 முதல் 200 யூனிட் வரை ரூ.3.25 இருந்து ரூ.4; 201 முதல் 300 யூனிட் வரை ரூ.5.40 இருந்து ரூ.6; 300 யூனிட்டுக்கு மேல் ரூ.6.80 இருந்து ரூ.7.50-ஆக உயர்த்தப்பட்டு, அக்.1 முதல் பயன்படுத்தப்பட்ட மின் பயன்பாடு கட்டணத்தில், உயர்த்தப்பட்ட கட்டணம் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 31, 2025
புதுச்சேரி: வாலிபருக்கு சரமாரி வெட்டு

புதுச்சேரி நாவர்குலம் களைவாணர் நகர் பகுதியில் வாலிபர் மீது ஒரு கும்பல் சரமாரி தாக்குதல், தாக்குதலில் படுகாயம் அடைந்த வாலிபர் மிகவும் ஆபத்தான நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தக் கொலை வெறி தாக்குதலுக்கான காரணத்தை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். புதுச்சேரியில் போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.


