News April 18, 2025
அன்னூர் காவல்துறையின் சார்பில் முக்கிய அறிவிப்பு

அன்னூர் காவல்துறையினர் இன்று 18-04-25 வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பகல் நேரங்களில் சாமியார் வேடமிட்டு காரில் மூன்று நபர்கள் தட்சனை கேட்பது போன்று தோட்டத்து வீடுகளை கண்காணிப்பதாக தகவல். இவ்வாறான யாரேனும் தங்கள் பகுதியில் சுற்றித்திரிந்தால் உடனே கீழ்கண்ட 9498101173 தகவல் தெரிவிக்குமாறு தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 5, 2025
கோவை: INTERVIEW இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், <
News December 5, 2025
கோவை அம்மன் கோயிலில் நிகழ்ந்த அதிசயம்!

கோவை அரசம்பாளையத்தில் அமைந்துள்ள பெரியநாயகி அம்மன் கோயில் சிலை ஒன்றின் மீது நேற்று கருநாகப் பாம்பு ஒன்று நீண்ட நேரம் அமர்ந்திருந்த சம்பவம் அப்பகுதி பக்தர்களிடையே பெரும் பரவசத்தை ஏற்படுத்தியது. இந்தச் செய்தி சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்குத் தெரியவரவே, ஏராளமானோர் கோயிலுக்கு விரைந்து வந்தனர். சிலை மீது கருநாகம் அமர்ந்திருந்த காட்சியைப் பார்த்து, சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
News December 5, 2025
கோவை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.


