News September 13, 2024

அன்னபூர்ணா குழுமத்தின் உரிமையாளருக்கு மிரட்டல்?

image

அன்னபூர்ணா குழுமத்தின் உரிமையாளரை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்தது மிகவும் கண்டித்தக்கது என விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் து.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், அதை வீடியோவாக வெளியிட்டதும், உச்சநீதிமன்ற நீதிபதி வீட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டதை வீடியோ வெளியிட்டதும் கடும் கண்டனத்திற்கு உரியது. இதன் மூலம் பாஜகவினர் விளம்பரத்திற்காக எதையும் செய்வார்கள் என்பது தெளிவாகிறது என்றார்.

Similar News

News October 26, 2025

விழுப்புரம்: இனி அலைச்சல் வேண்டாம், ஒரு மெசேஜ் போதும்!

image

விழுப்புரம் மக்களே கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதுவே பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி அலைச்சல் இல்லாமல் கேஸ் சிலிண்டரை ஈசியாக புக்கிங் செய்யலாம். ஷேர்

News October 26, 2025

விழுப்புரம்: இளைஞர்களுக்கு ரூ.10 லட்சம் கடன்!

image

பிரதம மந்திரி ரோஸ்கர் யோஜனா (PMRY) திட்டம், 1993-இல் தொடங்கப்பட்டது. படித்த வேலையற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை மானியக் கடன் வழங்குகிறது. உற்பத்தி, சேவை, வர்த்தகத் துறைகளில் கடன் வழங்கப்படும். 18-35 வயது வரையிலான, 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.15% வரை மானியமும், தொழில் மேம்பாட்டுப் பயிற்சியும் அளிக்கப்படும். மாவட்ட தொழில் மையங்கள் மூலம் <>விண்ணப்பிக்கலாம்.<<>>

News October 26, 2025

விழுப்புரத்தில் ஏற்றுமதி குறித்த கருத்தரங்கு: ஆட்சியர் தகவல்

image

விழுப்புரத்தில் ஏற்றுமதி வாய்ப்புகள் மற்றும் வழிமுறைகள் குறித்த கருத்தரங்கு அக்.28ஆம் தேதி காலை 10 மணிக்கு விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள பாலம்மாள் வணிக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதுகுறித்த மேலும் விபரங்களுக்கு 8925534035/9443728015 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!