News August 25, 2024
அன்னதான விழாவை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

இன்று கிருபானந்த வாரியாரின் 119 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அன்னதானத்தை பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். இதில் பொதுமக்கள், அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News January 3, 2026
வேலூர்: நாட்டுக்கோழிகள் வளர்க்க 50% மானியம்!

வேலூர் மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News January 3, 2026
வேலூர் மாவட்டத்தில் 1300 போலீசார் பாதுகாப்பு

வேலூர் மாவட்டம் அரியூரில் உள்ள ஸ்ரீபுரம் பொற்கோயிலுக்கு இன்று (ஜனவரி 03) இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வருகை தர உள்ளார். இதையொட்டி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தலைமையில் 1300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என மாவட்ட காவல் துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 3, 2026
வேலூர்: 8 கிராம் தங்கம், ரூ.50,000 பணத்துடன் திருமணம்

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.


