News January 23, 2025
அனைத்தையும் ஒன்றிய அரசே செய்ய முடியாது: செல்வப் பெருந்தகை

திருச்சி ஜங்ஷன் ரயில்வே நிலையத்திற்கு இன்று வருகை தந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது டங்ஸ்டன் விவகாரத்தில் அண்ணாமலை எங்கு போய் பேசினாலும் அதனை நடைமுறைப்படுத்துகின்ற அதிகாரம் மாநில அரசுக்கு தான் உள்ளது. அதை தமிழக முதலமைச்சர் தான் முடிவு எடுக்க வேண்டும். அனைத்தையும் ஒன்றிய அரசை செய்ய முடியாது என தெரிவித்தார்.
Similar News
News November 12, 2025
திருச்சி: டூவீலரில் சென்றவர் கீழே விழுந்து மரணம்

சிவகங்கையை சேர்ந்தவர் தினகரன் (29). இவர் கடந்த 6-ம் தேதி நவல்பட்டு 100 அடி சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்ததார். அப்போது அய்யனார் கோவில் அருகே வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அவர் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News November 12, 2025
திருச்சி: RKT பார்சல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

திருச்சி மாநகரில் அமைந்துள்ள RKT ஸ்பீடு பார்சல் நிறுவனத்தில் காலியாக உள்ள ACCOUNTANT உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் டிகிரி அல்லது டிப்ளமோ முடித்த, ஆண் மற்றும் பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.10,000 முதல் ரூ.13,500 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்கும் நபர் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <
News November 12, 2025
திருச்சி: காணாமல் போனவர் பிணமாக மீட்பு

மணப்பாறை அடுத்த மணப்பட்டி பிரிவு அருகே இன்று காலை சீகம்பட்டியைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் சாலையோரத்தில் மர்மமான முறையில் இறந்த கிடந்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


