News November 22, 2024

அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கல்வராயன் மலையில் நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் கள ஆய்வு மேற்கொண்ட அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் கள ஆய்வில் கலந்து கொண்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Similar News

News December 4, 2025

கள்ளக்குறிச்சியில் அதிகபட்சமாக உ.கீரனுாரில் 96 மி.மீ மழை

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. இதில், மி.மீ., அளவில் கள்ளக்குறிச்சி 2, தியாகதுருகம் 32, விருகாவூர் 20, கச்சிராயபாளையம் 11.5, கோமுகி அணை 3, அரியலுார் 7, மாவட்டத்தில் சராசரியாக 17.35 மி.மீ., மழை பதிவானது. மாவட்டத்தில் அதிகபட்சமாக உ.கீரனுாரில் 96 மி.மீ., மழை பதிவாகியது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது.

News December 4, 2025

கள்ளக்குறிச்சி: தடிமனான தோசை.. மனைவிக்கு உலக்கையால் அடி!

image

கள்ளக்குறிச்சி: அரியபெருமானூரைச் சேர்ந்தவர் மூர்த்தி (50). அவரது மனைவி ரேகா, தோசை சுட்டுக் கொடுத்துள்ளார். அப்போது தோசையை பார்த்த அவர், தோசை ஏன் இவ்வளவு தடிமனாக உள்ளது எனக் கூறி ஆபாசமாக திட்டி, உலக்கையால் கடுமையாக தாக்கியுள்ளார். அத்துடன் நிறுத்தாமல், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இது குறித்து ரேகா கொடுத்த புகாரின் பேரில், மூர்த்தி மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

News December 4, 2025

கள்ளக்குறிச்சி: நிறைவேறாத ஆசை – 94 வயது முதியவர் தற்கொலை!

image

கள்ளக்குறிச்சி: சோழம்பட்டைச் சேர்ந்தவர் சோலையாப்பிள்ளை (94). இவர் தனது மனைவி தனலெட்சுமியிடம் தனக்கு ஒரு இ-ஸ்கூட்டர் வாங்க வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு, தனலெட்சுமி மறுப்பு தெரிவித்து, உங்களுக்கு வயதாகிவிட்டது எனக் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!