News November 23, 2024

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம்

image

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், இன்று (நவ.23) கிராம சபை கூட்டங்கள் இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளன. இக்கிராம சபை கூட்டங்களில், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களை சிறப்பித்தல், மகளிர் சுயஉதவிக் குழுக்களை கவுரவித்தல், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவாதிக்கப்படவுள்ளன. பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு பயனடையுங்கள். ஷேர் செய்யுங்கள்

Similar News

News September 16, 2025

செங்கல்பட்டு: சைபர் கிரைம் எண்களை தெரிஞ்சிக்கோங்க

image

மொபைல் பயன்பாடு அதிகரித்து வரும் இந்த டிஜிட்டல் காலத்தில் லிங்க் அனுப்பி பணம் திருடுதல், வங்கி ஊழியர் போல் பேசி திருடுதல், தனிப்பட்ட தகவல்கள் திருட்டு போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து புகாரளிக்க சைபர் கிரைம் ADGP-044-29580300, மாநில கட்டுப்பாட்டு அறை-044-29580200, TOLL FREE NO-1930ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். நண்பர்களுக்கும் பகிருங்கள் கண்டிப்பாக உதவும்.

News September 16, 2025

தாம்பரம் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

image

தாம்பரம் அடுத்த சேலையூரைச் சேர்ந்த 8 வயது சிறுமி நேற்று மாலை தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது மதுபோதையில் வந்த நபர் ஒருவர் சிறுமியை மாடிக்கு தூக்கி சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் போதையில் இருந்த நபரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் கேரளாவை சேர்ந்த நிஷாயுதின் (30) என்பது தெரியவந்தது.

News September 16, 2025

செங்கல்பட்டை சேர்ந்தவர் மாநில தலைவராக நியமனம்

image

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில அணி, பிரிவுகளுக்கு பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் செங்கல்பட்டு வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மேற்கு தாம்பரம் மண்டலத்தில் உள்ள வழக்கறிஞர் குமரகுரு வழக்கறிஞர் பிரிவின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை உயர்நீதி மன்றத்தின் வழக்கறிஞராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!