News November 23, 2024
அனைத்து கட்சியுடன் கலந்தாய்வு கூட்டம் – ஆட்சியர்

சிவகங்கை, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம்- 2025 பணியின் மேற்பார்வையாளர் & புதிய திருப்பூர் பகுதி வளர்ச்சி கழக நிர்வாக இயக்குநர் ஹனீஸ் சாப்ரா இன்று(நவ.23) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்த முகாம்கள் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
Similar News
News July 11, 2025
ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் முகாம்

சிவகங்கை மாவட்டத்தில் ஜூலை.12 அன்று தேவகோட்டை, இராம்நகர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இதில், ரேஷன் கார்டில் பெயர், முகவரி, போன் நம்பர், பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். மிஸ் பண்ணிடாதீங்க SHARE பண்ணுங்க.பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட கலெக்டர் கா.பொற்கொடி கேட்டுக்கொண்டுள்ளார்.
News July 11, 2025
12ம் தேதி தேவகோட்டையில் சிறப்பு முகாம்

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவாக்க 12.07.2025 (சனிக்கிழமை) அன்று தேவகோட்டை, இராம்நகர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி கேட்டுக்கொண்டுள்ளார்.
News July 10, 2025
சிவகங்கையில் நாளை மதுபான கடைகள் மூடல்

சிவகங்கை நகரில் உள்ள ஸ்ரீ பிள்ளைவயல் காளியம்மன் திருக்கோவிலில் நாளை (ஜூலை.11) பூச்சொரிதல் விழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு சட்டம் ஒழுங்கினை பராமரிக்கும் பொருட்டு நாளை ஒரு நாள் மட்டும் சிவகங்கை நகர் சரகத்திற்குட்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.