News November 23, 2024
அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டங்கள் இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளன. இக்கிராம சபை கூட்டங்களில், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களை சிறப்பித்தல், மகளிர் சுயஉதவிக் குழுக்களை கவுரவித்தல், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவாதிக்கப்படவுள்ளன. பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு பயனடையுங்கள். ஷேர் செய்யுங்கள்
Similar News
News July 11, 2025
பெரம்பலூர்: மாணவர்களுக்கு திறன் பயிற்சி அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் தொழில் நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரத்தினை முன்னிட்டு பல்வேறு தொழில் நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் ஜூலை 15 வரை நடைபெறவுள்ளன. ஆகவே, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு திறன் பயிற்சி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஜூலை 15-ம் தேதி அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் பெரம்பலூர் மற்றும் குன்னத்தில் நடைபெற உள்ளது என ஆட்சியர் அறிவித்துள்ளார். SHARE IT NOW…
News July 11, 2025
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரத்தினை முன்னிட்டு பல்வேறு தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் (ஜூலை 15) வரை நடைபெறவுள்ளன. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு திறன் பயிற்சி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி (ஜூலை 15) அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் பெரம்பலூர் மற்றும் குன்னத்தில் நடைபெற உள்ளது என கலெக்டர் அறிவித்துள்ளார்.
News July 10, 2025
மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் இன்று (ஜூலை 10) மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் முன்னிலையில் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் குறித்து ஆய்வு செய்தும் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க ஆலோசனையும் வழங்கினார்.