News November 23, 2024
அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்

திருவாரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டங்கள் இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளன. இக்கிராம சபை கூட்டங்களில், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களை சிறப்பித்தல், மகளிர் சுயஉதவிக் குழுக்களை கவுரவித்தல், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவாதிக்கப்படவுள்ளன. பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு பயனடையுங்கள். ஷேர் செய்யுங்கள்
Similar News
News December 13, 2025
திருவாரூர் மாவட்டத்திற்கு புதிய ரயில்கள்

வரும் 01.01.2026 முதல் தெற்கு ரயில்வேயின் கீழ் இயங்கும் சில பயணிகள் ரயில்கள் நிரந்தர ரயில்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது வரை சிறப்பு ரயிலாக இயங்கி வரும் திருவாரூர் – காரைக்குடி, காரைக்குடி – திருவாரூர் மற்றும் பட்டுக்கோட்டை – திருவாரூர், திருவாரூர் – பட்டுக்கோட்டை ஆகிய ரயில்கள் நிரந்தரமாக இயக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

திருவாரூர்: ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (டிச.12) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!