News January 24, 2025

அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் 

image

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஜன.26ம் தேதி ஊராட்சி தலைவர்கள் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது செலவினம் குறித்து விவாதிக்கப்படும். 2024-25 ஆம் ஆண்டிற்கான கிராம வளர்ச்சி திட்டத்திற்கு ஒப்புதல் பெறப்படும். எனவே பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..

Similar News

News November 23, 2025

விற்பனைக்காக வலி நிவாரணி (போதை) மாத்திரைகள் வைத்திருந்தவர் கைது

image

தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலமேடு பொன்னியம்மன் கோவில் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை சோதனை செய்ததில் விற்பனைக்காக போதை மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவர அவரது பெயர் ஜெய்கணேஷ் என தெரிய வந்தது தாலுகா போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தொடர்ந்து தாலுகா போலீசார் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்

News November 23, 2025

விழுப்புரம்: வேலைக்கு செல்லாத கணவன் – மனைவி தற்கொலை!

image

விழுப்புரம்: கோணை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் மனைவி புவனேஸ்வரி (32). நாகராஜ் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில், விரக்தியில் புவனேஸ்வரி வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்துவிட்டார். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், நேற்று உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News November 22, 2025

கண்டாச்சிபுரம் ஆட்சியர் ஆய்வு

image

விழுப்புரம் மாவட்டம் 76 திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்டாச்சிபுரம் வட்டம், ஒதியத்தூர் ஊராட்சியில் உள்ள புனித மரியன்னை உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் ஆய்வு நடைபெற்றது. இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முகாமினை மாவட்ட தேர்தல் அலுவலர் /ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (நவ.22) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

error: Content is protected !!